Thursday, April 2, 2020
Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளுடன்´ தமிழ் மொழியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றை நீக்கிய சம்பவம் தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. வீதியின் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் பலகை ஒன்றே இவ்வாறு நீக்கப்பட்டிருந்தது. குறித்த முறைபாடு தொடர்பில் பானந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமான இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நேற்று  (25) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு எனவும் அந்த ஒப்பந்தம் குறித்து மீள ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோல்கியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். கேள்வி : சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் போட்டியில் இலங்கை தொடர்புபடுவது எவ்வாறு என கூறுவீர்களா? இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாம் மத்தியஸ்த நாடாகவே இருக்க விரும்புகின்றோம். அவ்வாறு செய்ய முடியும். அதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. உலகமயமாக்கல் அரசியலை பொறுத்தவரை இந்து சமூத்திரம் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றது. எமது நாடு பூகோள ரீதியில் முக்கிய இடத்தில் உள்ளது. அனைத்து நாடுகளும் இலங்கை கடற்பகுதியை கடந்தே பயணிக்கின்றன. ஆகவே இந்த கடல் மார்கம் முழு உலகிற்கும் திறந்து விடப்பட வேண்டும். ஒரு நாட்டுக்கு மாத்திரம் இந்த மார்க்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆகவே அதிகாரமிக்க அரசாங்கங்களுடன் அதிகார மோதல்களில் ஈடுபட முடியாது. சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு பெற்றிருந்தாலும் அதன் முழுமையாக கட்டுப்பாட்டை நாம் அந்த நாட்டுக்கு  வழங்கவில்லை. குறித்த துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியது. சீனா எமது நட்பு நாடு என்றாலும் அபிவிருத்திக்கு அவர்களின் உதவி தேவைப்பட்டாலும் அந்த விடயம் தவறானது. அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனை கூறுவதற்கு நான் அஞ்சவில்லை. அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளனர். ஒரு வருடம் இரண்டு வருடத்தை பார்காமல் எமது எதிர்காலம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் அதனை மீள் பரிசீனனை செய்ய வேண்டும். வணிக நோக்கங்களுக்காக துறைமுகத்தின் ஒரு முனையை வழங்குவது மற்ற விடயமாகும். உண்மையை சொன்னால் இந்தியா, சிங்கபூர், ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள்
எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றிற்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி...
  பாதுகாப்பான நாடொன்றினை உருவாக்கும் நோக்குடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று  (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   நேற்று  முற்பகல் ஆரம்பமான இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.   இதன்போது, ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள...
  ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்று நாட்டின் அணைவருக்கும் ஜனாதிபதி ஒருவரே. நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அணைவருக்கும் பொதுவானவரே. எனவே இந்த நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. அதனை அவர் சரியாக செய்வார் என நான் எதிர்பார்க்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு...
  சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக நடவடிக்கை முன்னெடுத்த செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எதிர்வரும்...
  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் வேன் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.   இச்சம்பவம் நேற்று  (24) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   விடுமுறை நாள் என்ற காரணத்தினால் உடையார் கட்டுப்பகுதியில் மதுஅருந்திவிட்டு மதுபோதையில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த அதிநவீன வேன் ஒன்று காளிகோவிலடிப் பகுதியில் பரந்தன் நோக்கி...
சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்தார். அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர்...
உழைக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.   அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்தனவின் ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினார்.   கொஸ்கம, பொருளுகொடவில் அமைந்துள்ள ஸ்தூபிக்கு அருகாமையில்...
  நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய   கொழும்பு, கம்பஹா,களுத்துறை,கண்டி, மாத்தளை,  யாழ்ப்பாணம், வவுனியா  உள்ளிட்ட 25  மாவட்டங்களுக்கும் ராணுவப் படைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து  நாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ   முப்படையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6,969FansLike
15SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts