Thursday, April 2, 2020
மேல், மத்திய, சபரகமுவ, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும், மட்டகளப்பு மற்றும் அப்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும்எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நியமனங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வழங்கவில்லை என்றால், அரசியலில் விலக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.தான் மாத்திரமல்ல மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்காவிட்டால் எடுக்க வேண்டிய மாற்று தீர்மானங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு எனவும் மேலும் சிலர் அந்த தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருக்கின்றனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தோற்றத்துடன் புதிய ஆரம்பம் ஏற்பட வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
  சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில்  பெண்ணொருவரிடம்  சுமார் இரண்டு லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிலாபம் உதவிக் காவல்துறை அத்தியட்சகர்  எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த காவல்துறை அத்தியட்சகர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த...
வன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது .   தற்போது வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் கால் கைகளை இழந்த போர் வீரர்களுக்கும் மற்றும் கணவர்களை இழந்த பெண்களுக்கும் மற்றம் போரால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு  தேவையான பண உதவிகள் பொருளுதவிகள் என்று...
எந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும்...
இலங்கையால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார்.   இலங்கையால் ஸ்திரதன்மையை  நிலைநாட்ட...
6,969FansLike
15SubscribersSubscribe
- Advertisement -

Recent Posts