நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் .  ஜனாதிபதி

0
386
சட்ட ஆட்சியை உறுதிப்படுத்தும் கொள்கையில் நீதித்துறையில் செயலாற்றுபவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் சூழல் நாட்டில் உருவாகுதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருத்தமற்றதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வத்தளையில் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்றயதினம் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நீதித்துறையினர் மட்டுமல்லாது சகல துறையினரும் திருப்தியாகவும் சுதந்திரமான சூழலிலும் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஊழியர்கள் முகங்கொடுத்திருக்கும் சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

நீதிபதிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் குறித்து முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அவர்களது நியாயமான மனக்குறைகளை முன்வைப்பதற்கு விசேட பிரிவொன்றை தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதுடன், உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்றை இதற்காக நியமித்து அந்தப் பிரிவை நடத்திச்செல்ல வேண்டும் என்று முன்மொழிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here