கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது

0
226

கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியா பணிமனையில் கரும்புலிகள் நாள் நடைபெற்றது

ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியினை நா.க.த.அ செயற்பாட்டாளரும் முன்னாள் போrராளியுமான கரன் என்பவர் ஏற்றினார்.அதனைத் தொடர்ந்து டிவோன் என்ற செயற்பாட்டாளர் கரும்புலிகளின் படத்திற்கு மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து

நா.க.த.அரசின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் கரும்புலிகளின் உருவபடத்திற்கு நினைவுச்சுடர் ஏற்றிவைத்து கரும்புலிகள் பற்றி சிற்றுரை ஒன்றை வழங்கினார்.

தொடர்ந்து மனித உரிமை அமைச்சர் மணிவன்னன் அவர்களும் கரும்புலிகள் பற்றிய வரலாற்றை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அந்நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தியதுடன் கொடி கையேற்போடு நிகழ்வு நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here