கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் திட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  

0
302
கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் திட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் போராட்டங்களை முன்னெடுத்து கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் திட்டங்களில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இதைத் தெரிவித்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை பற்றி ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு அமைச்சர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.இது பற்றித் தெரிவித்த அமைச்சர்: அரசியலுக்காகவும்,அரசைக் கவிழ்க்கவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் இரகசிய திட்டங்கள், நடவடிக்கைகளில் சில தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இது பற்றி பெற்றோர்கள் தெளிவுடன் செயற்பட வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். எனினும்

நியாயமற்ற கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் பரீட்சைகளுக்கு குந்தகம் விளைவிப்பதைக் கண்டிக்கின்றேன்.

சில கல்வி அதிகாரிகள் தங்களுடைய தொழில் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தொழில் உரிமைகள் என்னும் போர்வையில் இவ்வாறு அச்சுறுத்தி மாணவர்களின் கல்விக்கு குந்தகம் விளைவிப்பதை எதிர்க்கிறோம். இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக

கல்வி அமைச்சினூடாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். கடந்த காலங்களில் அரசியல் மற்றும் ஏனைய பல காரணங்களால் தொழிலில் பாதிப்புக்குள்ளாகி பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் கிடைக்காத கல்வி சேவை அதிகாரிகளுக்கு கட்சி பேதமின்றி

நியாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்ைககள் எடுக்கப்படவுள்ளன.

இதைக் குழப்ப முனைவது தார்மீகமாகாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here