ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0
411
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கத்தோலிக்க பக்தர்களின் பக்தி மிகுந்த புனித திருத்தலமான மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து மக்களின் திருயாத்திரைக்கும் பாத்திரமாகியுள்ளது.

கடந்த காலங்களில் யுத்தங்களின் போது இந்த தேவாலயம் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்டிருந்தது  இதனடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க மடு திருத்தலம் உள்ளிட்ட பிரதேசங்களை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி போக்குவரத்து, நெடுஞ்சாலை, நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here