பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா.

0
497

பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா

மைதானத்தை சுற்றி அணிவகுப்பு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்
மைதானத்தை சுற்றி அணிவகுப்பு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தியாகதீபம் லெப் .கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நான்காவது தடவையாக மாபெரும் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 /07 /2018 அன்று kenton Recreation Grouind ,39A Carlton Avenue ,Harrow ,HA3 8AX மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற்றது .

தேசிய கீதம் மற்றும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
தேசிய கீதம் மற்றும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்

புலம்பர்யர் தேசத்திலே ஓர் தேசியம் நோக்கிய பாதையில் பயணித்து வருகின்ற நாடுகந்த தமிழீழ அரசாங்கம் . தேசியம் மட்டுமன்றி புலத்திலும் தமிழர் கலைகலாச்சார விழுமியங்கள் ஓங்கிவளர வேண்டும் எனும் நோக்குடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமுகனத்துறை அமைச்சு இவ்விளையாட்டு விழாவை தொடர்ந்து வருடாவருடம் நடாத்தி வருகின்றது .

 கேணல் திலீபன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
கேணல் திலீபன் அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுக்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடகத்துறையினரின் நேரடி ஒளிபரப்பு.
“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுக்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடகத்துறையினரின் நேரடி ஒளிபரப்பு.”

இவ்வாறு இம்முறை நடைபெற்ற்ற விளையாட்டு விழாவில் சர்வதேச விளையாட்டுகளுடன் எமது பாரம்பரிய விளையாட்டுகளும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளும் நடைபெற்றிருந்தன .இங்கு பல்வேறுபடட விளையாட்டு அணிகள் கலந்து கொண்டதுடன் பொதுமக்கள் ஏனைய அமைப்பைச்சார்ந்த பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

விளையாட்டுக்களின் நிறைவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுபோதும் எடுக்கப்பட்ட புகைப்படம்
விளையாட்டுக்களின் நிறைவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுபோதும் எடுக்கப்பட்ட புகைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here