யாழ் கோட்டை கையகப்படுத்தப்பட மாட்டாது .மகேஷ் சேனாநாயக்க

0
377

யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை இராணுவம் கையகப்படுத்துவதாக தெரிவித்தவிடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை என இரணுவ கட்டளை தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க யாழ். ஒல்லாந்தர் கோட்டையினை சென்று பார்வையிட்டார் பாதுகாப்பின் நிமித்தம் நீண்டகாலமாக தங்கியுள்ள இராணுவத்தினரை சந்தித்து அவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கோட்டையினை இரணுவம் கையகப்படுத்துவதாக தெரிவித்த விடயத்தில் எவ்வித உண்மையும் இல்லை. யாழ் நகர மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் கடந்த 25 வருடங்களுக்கும்மேலாக குறித்த அளவிலான இராணுவத்தினர் கோட்டையில் இருந்துவருவதாக ல்அவர் அங்கு குறிப்பிட்டதுடன் இது நாட்டின் எல்லா பகுதிகளிலும் உள்ள ஒரு சாதரண நடவடிக்கை. 

பொது மக்கள் எந் நேரத்திலும் கோட்டைக்கு வந்து செல்ல முழு சுதந்திரமும் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here