ஸ்ரீ லங்காவை சர்வதேச கொண்டு செல்ல கையெழுத்து வேட்டை!

0
308

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதற்கான முயற்சிகளில் பன்னாட்டு தளத்தில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடந்த 12 ம் திகதி லண்டன் ஈஸ்ட் ஹம் முருகன் கோயில் ,ஈலிங் அம்மன் கோயில் ஆலய தேர்த்திருவிழாவின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மக்களிடம் கையெழுத்து சேர்க்கும் பிரச்சார பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2017 மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.

அந்தவகையில் இலங்கை இன்றுவரை எதனையும் நிறைவேற்றாத பட்சத்தில் மீண்டும் ஐநாவிடம் இலங்கைக்கு எதிராக முறையிடுவதற்கு இந்த கையொப்ப பிரச்சாரம் இடம்பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here