பிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.

0
469

 

தமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின

இங்கு பிரித்தானியக்கொடியுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள அரசின் திட்டமிட்ட இக் கொடிய இனப்படுகொலையில் பலியான அப்பாவிப் பொதுமக்களை நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன்

போர் முடிவடைந்து இற்றைக்கு 9 ஆண்டுகள் ஆனநிலையிலும் இவ் இனப்படுகொலையினை மேற்கொண்ட ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசினை சர்வதேச பன்னாட்டு விசாரணைப்பொறிமுறைக்கு உட்படுத்தவேண்டும் , போர்க்கைதிகள் விடுதலைசெய்யப்பட வேண்டும் ,அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் போன்ற தமது உள்ளக்குமுறல்களை பலூன்களில் ஏழுதி வானைநோக்கி பறக்க விட்டு தமது உணர்வலைகளை வெளிப்படுத்தியிருந்தனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here