எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. நாமல் ராஜபக்ச

0
313
எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. நாமல் ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு முடியாது எனவும், அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையெனவும், கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கான அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்த பொய்ப் பிரசாரம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனபல நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் எனவும் அரசாங்கம் கொண்டுள்ள அச்சமே இவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கான காரணம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here