ஈழத்தில் சோழர் ஆட்சியில் ஐனநாதமங்களம்

0
473

ஈழத்தில் சோழர் ஆட்சியில் ஐனநாதமங்களம்(இன்றைய பொலநறுவை)என்று அழைக்கப்பட்ட சோழர்களின் தலைநகரில் பயன்படுத்தப்பட்ட உலகின் முதல் “நீர்வடிகட்டி”இயந்திரமாகும்(filter water machine)!
காலம்:கி.பி 993-1077 ஆண்டுகள்.

இந்த நீர்வடிகட்டி அழகிய கலை வண்ணத்துடன் அந்தக் காலத்திலேயே சிறந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரமே,இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாகும்.மேற்பக்கம் நீரானது தேக்கி வைக்கப்பட்டு அதனடியில் முடியளவு உள்ள துவாரத்தின்   மூலம் நீரானது வெளியேற்றப்பட்டு அதன் கீழ் மட்பானையில் நீரானது விழுமாறு செய்யப்பட்டுள்ளது.மட்பானையில் மூலிகையில் நனையும் நிர் உடலை தகுந்த சீதோசன நிலையில் வைத்திருக்குமாறு செய்யப்பட்ட இந்த நீர்வடிகட்டி எந்திரம் ஒரு வரலாற்று பொக்கிசமாகும்…..

ஈழத்தில் சோழர் ஆட்சி:கி.பி 993-கி.பி 1077.

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டுகள் ஈழத்தில் சோழர் ஆட்சி நிலவியது.சோழ மன்னனான முதலாம் இராஐராஐன் கி.பி 993-ஆம் ஆண்டு ஈழத்தின் மீது படையெடுத்து தலைநகரான அனுராதபுறத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியை கைப்பற்றிக் கொண்டான்.அனுராதபுறத்தை கைவிட்டு பொலநறுவையை தலைநகராக்கினான்.சோழர் ஆட்சிக்குட்பட்ட ஈழத்தின் பகுதி “மும்முடிச் சோழ மண்டலம்”என பெயரிட்டு,தலைநகரான பொலநறுவையையும் “ஐனநாதமங்கலம்”என பெயர் மாற்றம் செய்யப்பட்டது…..இந்தக் காலமே ஈழத் தமிழர்களின் பொற்காலமாக கருதப்பட்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here