மக்கள் கூட்டத்தை கூட்டி அரசாங்கத்தை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. நளின்

0
297

மக்கள் கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு மதுபானம் வழங்கி கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கலாம் என எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பிரதியமைச்சர் நளின் பண்டா தெரிவித்தார்.

 

ஊடக தகவல் மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மக்களுக்கு மதுபானங்களை வழங்கி வன்முறைகளை தூண்டி கொழும்பில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்தனர். ஆனால் சாத்தியப்படவில்லை. பாதுகாப்பு படையினர், கலகம் அடக்கும் பொலிஸார், நீர்த்தாரை வாகனங்கள் என அனைத்தும் ஆயத்தமாக இருந்த போதும் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கவில்லை. காரணம் மது பானத்தை குடித்து விட்டு வீதியில் மயங்கி கிடந்தார்கள்.

பாராளுமன்றம், அலரிமாளிகை மற்றும் நீதிமன்றத்தை சுற்றிவளைக்க சதிசெய்தனர். 10 இலட்சம் பேர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்த்தார்கள். இறுதியில் 4 ஆயிரம் பேரே கலந்துகொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here