Friday, January 17, 2020
Home இலங்கை இலங்கை குறித்து புதிய மனித உரிமை ஆணையாளர் கரிசனைகளை வெளியிட்டார்.

இலங்கை குறித்து புதிய மனித உரிமை ஆணையாளர் கரிசனைகளை வெளியிட்டார்.

0
364
 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட் தனது முதலாவது உரையில் இலங்கை குறித்து கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 வது அமர்வினை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புதிய ஆணையாளர் இலங்கையின் அதிகாரிகள் நிலைமாற்றுக்கான நீதியை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தற்போதே மக்களின் கருத்துக்களை அறிய ஆரம்பித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனோர் குறித்த அலுவலகம் துரிதமாக பணியாற்றவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள பச்செலெட் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு பதில்களை அலுவலகம் வழங்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறுதல் மற்றும் உண்மையை கண்டறிவதில் அதிகளவு முன்னேற்றத்தை கண்டிருந்தால் நாட்டின் நிரந்தர ஸ்திரதன்மையும் செழிப்பும் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற இனவாத மற்றும் இனங்களிற்கு இடையிலான சம்பவங்கள் கவலையளிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here