உங்களால் முடியாவிட்டால் தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். ஆனந்தசங்கரி

0
360

உங்களால் முடியாவிட்டால் தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். ஆனந்தசங்கரி

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப் படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந் த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தான் 2004ம் ஆண்டு முதல் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையிலேயே வலியுறுத்தி வந்துகொண்டிருக்கின்றேன். ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக் கொண்டுள்ள சம்பந்தன் தலைமையிலானவர்கள் இவர்கள் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்றார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது. அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துவரும் அவர்கள் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்த தவறியுள்ளனர்.

உங்களால் முடியாவிட்டால் எனக்கு தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் தந்து பாருங்கள். அப்பதவியின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பா.ம உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர் பொறுப்பு வாய்ந்த அமைச்சு பதவியில் இருந்தபோது, அவரும் ஓர் பெண் என்றபடியால் உணர்வுகளை கட்டுப்படுத்தாது அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்தார். அது தவறு.

அவர்மீது வழக்கு தொடர வேண்டும் என்றால், 2004ம் ஆண்டு தேர்தலில் தமிழரசு கட்சி விடுதலை புலிகளை ஆதரிப்பதாகவும், அவ்வமைப்பின் செயற்பாடுகளிற்கு முழுமையாக ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் 22 பேர் பாராளுமன்றம் சென்றார்கள். அவர்கள் என்ன சாதித்தார்கள் என்று வீ. ஆனந்தசங்கரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here