ரிஷபம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 வாக்கிய பஞ்சாங்கம் .

0
574

ரிஷபம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !!
வாக்கிய பஞ்சாங்கம் :

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.

திருக்கணித பஞ்சாங்கம் :

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.

விடா முயற்சியும், அன்பும், தைரியமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்கு செல்கிறார். எதிர்பார்த்த திருமண வரன்கள் கைகூடும். வர்த்தகம் தொடர்பான வியாபாரங்களில் இலாபம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபமும், அனுகூலமான சூழலும் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

தொழில் சம்பந்தமான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மனதிற்கு பிடித்த விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளால் ஆதரவு உண்டாகும். இணையதளம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டப்படுவீர்கள். வெளிநாடு தொடர்பான பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகளால் சுபிட்சமான தருணங்கள் உண்டாகும். தொழில் முனைபவர்களின் நிர்வாகத் திறமை மேம்படும். எண்ணிய செயல்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வருத்திக் கொண்டிருந்த கடன் பிரச்சனைகள் யாவும் கட்டுக்குள் வரும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் குணமறிந்து செயல்படுவது நன்மையை தரும். வேலையாட்களிடம் சினம் கொண்ட பேச்சுகளை தவிர்க்கவும். தொழிலில் பழைய சரக்குகளால் இலாபம் உண்டாகும். அரசு சம்பந்தமான பணிகள் சிறிது காலதாமதத்திற்கு பின்பு நிறைவேறும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். சவாலான வாய்ப்புகளால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்விற்கான சூழல் அமையும். பணியில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் கல்வியில் சற்று கவனத்துடன் இருக்கவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குருமார்களிடம் நிதானப்போக்கை கையாளவும். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றியும், சாதனையும் செய்வார்கள்.

பெண்களுக்கு :

உத்தியோகத்தில் பெண்களுக்கு ஆதரவான சூழல் அமையும். புதிய தோழிகளின் அறிமுகம் உண்டாகும். குடும்ப பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு இலாபகரமான சூழல் அமையும். எதிர்பார்த்த பயிர் விளைச்சல்களால் இலாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்க காலதாமதமாகும். எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்களும், சங்கடங்களும் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த சாதகமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். புதிய முயற்சிகள் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

பரிகாரம் :

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here