மேஷம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 .

0
612

மேஷம் ராசியின் குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 !!
வாக்கிய பஞ்சாங்கம் :

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 4ம் தேதி வியாழக்கிழமை 10:15 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.

திருக்கணித பஞ்சாங்கம் :

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி வியாழக்கிழமை 07.20 PM நேரத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார்.

வேகமும் சாதுர்யமான பேச்சுகளை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அமர்வதால் தொழில் சார்ந்த அலைச்சல்களும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியான செயல்களுக்கு தீர்வு கிடைக்கும். அனுபவ ரீதியாகவும், புத்திசாலித்தனத்துடனும் சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். கடன் வாங்கி தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் அமையும். வழக்குகள் முடிவுக்கு வரும். மனதில் நிலையற்ற எண்ணங்களால் சில குழப்பமான சூழ்நிலைகள் உண்டாகும்.

தாயாரின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வீட்டில் சுபச் செயல்கள் கைகூடும். பணிபுரியும் இடங்களில் எதிர்பார்த்த இடமாற்றத்தால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்டு வந்த செயல்கள் இந்த காலக்கட்டங்களில் நிறைவடையும். புனித யாத்திரைகள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்கள் கைகூடும்.

வியாபாரிகளுக்கு :

வியாபாரிகள் தொழில் சம்பந்தமான முதலீடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தொழிலில் உள்ள பழைய கடன்களை வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகஸ்தரர்கள் :

உத்தியோகஸ்தரர்களுக்கு பணிபுரியும் இடங்களில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கையாளவும். மற்றவர்களின் பணிகளை விமர்சிப்பதை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு :

மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள் கூடுதல் உழைப்பினால் மட்டுமே எதிர்பார்த்த முடிவுகளை பெற இயலும்.

பெண்களுக்கு :

பணியில் உள்ள பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், எதிர்பாராத இடமாற்றமும் நேரிடலாம். உறவினர்கள் மற்றும் பங்காளிகளுடன் அனுசரித்து செல்லவும். வீண் பேச்சுகளை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான மதிப்பு கூடும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு நீர் வள மேன்மையால் எதிர்பார்த்த விளைச்சல் உண்டாகும். விளைச்சல் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க சிறிது காலதாமதம் நேரிடலாம். உறவினர்களின் ஆதாயமும், ஆதரவும் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகள் எதையும் பேசுவதற்கு முன்பு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும். கவனமற்ற செயல்களால் உங்களின் பெயருக்கு கலங்கம் ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சில போராட்டங்களுக்கு பிறகே உண்டாகும். நிதானத்துடன் செயல்படுவதால் சுபமான பலன்கள் உண்டாகும்.

பரிகாரம் :

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here