இலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

0
503

இலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் அடுத்த 36 மணித்­தி­யா­லங்­களில் இலங்கையில் வடமேல் மாகாணம், மத்­திய மாகாணம், வட­மத்­திய மாகாணம், ஊவா மாகாணம், மேல்­மா­காணம் மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதிவாகும் என்று. அதே­வேளை வட­மத்­திய மாகாணம் மற்றும் தெற்கு மாகா­ணங்­களில் 100 மில்­லி­மீற்­ற­ருக்கும் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கலாம் என்றும் இலங்கை வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது இந்தத் தாழ­முக்­கத்தின் கார­ண­மாக மன்­னா­ரி­லி­ருந்து புத்­தளம், கொழும்பு, காலி, மாத்­தறை மற்றும் ஹம்­பாந்­தோட்டை கடற்­பு­றங்­களில் கடும் காற்றும் இடி­யுடன் கூடிய மழையும் பெய்யும். இவ்­வாறு இடி­யுடன் கூடிய மழை­பெய்யும் போது மணிக்கு 70-–80 கிலோ­மீற்றர் வேகத்­திலும் அல்­லது அதை விட அதி­க­மா­கவும் காற்று வீசலாம். இதனால் கடலில் அலை­களின் உய­ரமும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன.

களுத்­து­றை­யி­லி­ருந்து காலி, ஹம்­பாந்­தோட்டை மற்றும் பொத்­துவில் வரை­யான கட­லோ­ரங்­களில் எதிர்­வரும் நாட்­களில் கட­ல­லை­களின் உயரம் 2-2.5 மீற்றர் வரை உயரும் சாத்­தியம் இருக்­கின்­றது. இந்த உய­ரத்­தினால் கட­ல­லைகள் வீதிக்கு வரா­விட்­டாலும் இந்த அலை­களின் உயரம் மேலும் உய­ரக்­கூ­டிய சாத்­தி­யக்­கூ­றுகள் இருக்­கின்­றன. இதனால் கடலில் மீன்­பி­டிக்கச் செல்லும் மீன­வர்கள் இது தொடர்பில் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்­ச­ரித்­துள்­ளது.

மேலும், நாட்டின் பல பாகங்­களில் இடி மின்னல் தாக்­கங்கள் அதி­க­மாக இருக்கும். அதனால் பொது­மக்கள் திறந்த இடங்­க­ளிலோ, மைதா­னங்­க­ளிலோ, வயல்­வெ­ளி­க­ளிலோ, தோட்­டங்­க­ளிலோ அல்­லது மரங்­க­ளுக்கு கீழேயோ இருப்­பதைத் தவிர்த்து பாது­காப்­பான இடங்­களில் இருக்­க­வேண்டும்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கைத்­தொ­லை­பேசி பாவ­னை­களை தவிர்த்­துக்­கொள்ளும் அதே­வேளை ஒரு­சில இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­களின் பாவ­னை­க­ளையும் தவிர்க்­க­வேண்டும். சைக்கிள், மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளவும் அதேவேளை நீர்த்தேக்கங்களின் அருகில் இருக் கும்போதும் அவதானத்துடன் இருக்கவேண்டுமென்று வளிமண் டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here