பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  இராணுவ வீரர்களை சேவையில் 

0
47

 

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய   கொழும்பு, கம்பஹா,களுத்துறை,கண்டி, மாத்தளை,  யாழ்ப்பாணம், வவுனியா  உள்ளிட்ட 25  மாவட்டங்களுக்கும் ராணுவப் படைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து  நாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ   முப்படையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here