எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை

0
179

எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றிற்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரி தற்போதும் ஐக்கிய தேசிய முன்னணியின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here