சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார்

  சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியல்வாதியாக நடவடிக்கை முன்னெடுத்த செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி...

வேன் மோதியதில் இளைஞன் பலி 

  முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியில் வள்ளிபுனம் காளிகோவிலடிப்பகுதியில் வேன் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.   இச்சம்பவம் நேற்று  (24) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   விடுமுறை நாள் என்ற காரணத்தினால் உடையார் கட்டுப்பகுதியில் மதுஅருந்திவிட்டு மதுபோதையில்...

சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடப்படும்.

சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எதிர்வரும் வாரத்தில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்தார். அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமது...

உழைக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக புதிய வேலைத்திட்டங்கள் .

உழைக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, தொழிற்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.   அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்தனவின் ஸ்தூபிக்கு மலர்...

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  இராணுவ வீரர்களை சேவையில் 

  நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்  பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய   கொழும்பு, கம்பஹா,களுத்துறை,கண்டி, மாத்தளை,  யாழ்ப்பாணம், வவுனியா  உள்ளிட்ட 25  மாவட்டங்களுக்கும் ராணுவப் படைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து  நாட்டை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ   முப்படையினருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை 

மேல், மத்திய, சபரகமுவ, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும், மட்டகளப்பு மற்றும் அப்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும்எதிர்வு கூறப்பட்டுள்ளது.