பாடசாலை மாணவனால் தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர்…!!

இலங்கை பாடசாலை மாணவன் ஒருவரினால் சிறிய ரக ஹெலிகப்டர் ஒன்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே இந்த ஹெலிகப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவனினால் தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர் நேற்று பாடசாலை மைதானத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தருஷிக்க என்ற மாணவன் தனது நீண்ட கால இலட்சியமான இந்த ஹெலிகப்டரை தயாரித்துள்ளார்.மாணவனின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது

அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நியமனங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

அரசியலில் இருந்து விலக தயாராகும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வழங்கவில்லை என்றால், அரசியலில் விலக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.தான் மாத்திரமல்ல மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்காவிட்டால் எடுக்க வேண்டிய மாற்று தீர்மானங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு எனவும் மேலும் சிலர் அந்த தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருக்கின்றனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தோற்றத்துடன் புதிய ஆரம்பம் ஏற்பட வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்  

  சிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில்  பெண்ணொருவரிடம்  சுமார் இரண்டு லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிலாபம் உதவிக் காவல்துறை அத்தியட்சகர்  எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த காவல்துறை அத்தியட்சகர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது.

  மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து...

02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.

  யாழ்ப்பாணதீபகற்பத்தில் சகல வளங்களும் பொருந்திய பணிப்புலத்தில் அடியவர்கள் வேண்டியதை வேண்டியபடி அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ  முத்துமாரி அம்மன் வேதியர்கலின் வேத ஒலியுடன் மங்கல வாத்தியக் கலைஞர்களின் நாதஸ்வர தவில் முழக்கத்துடன். அடியவர்களின் அரோகரா கோஷம் வானை முட்ட அழகிய...