யாழில் மாணவியின் சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.

0
148

யாழ்ப்பாணம்,  வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகாமையில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.

இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி மற்றும் செருப்பு,  போன்றனவை மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சோக்கோ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளாரா? அல்லது வேறெதும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதா? என்பது தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here