பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.

0
521

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் தஹ்ரீக் இ இஸ்லாம் கட்சி கூடுதல் ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. தனது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள இம்ரான்கான், ஆட்சியமைக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இன்று அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட பாதி அளவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தஹ்ரீக் இ இன்ஸாப் கட்சி முன்னணியில் உள்ளது. எனினும் அந்த கட்சியால் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாத நிலையில் கூட்டணி அரசு ஒன்றையே அமைக்க வேண்டிய நிலை  அந்தகட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கானின் போட்டியாளர்கள் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக சுமத்தும் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற கவர்ச்சிகரமான கிரிக்கெட் அணித்தலைவரான இம்ரான் கான், தனது அரசியல் வாழ்வில் நீண்டதொரு பயணத்திற்கு பின்னரே இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here